தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு கட்சியும் அதிரடியான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அமமுக தேர்தல் அறிக்கை டிடி வி தினகரன் வெளியிட்டுள்ளார். அதில் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3000, கரும்பு டன்னுக்கு ரூபாய் 4000 விவசாயிகளுக்கு வழங்கப்படும் .கிராமத்தினர் நகரத்தை நோக்கி செல்லாமல் உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். அம்மா கிராமப்புற வங்கிகள் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.