Categories
மாநில செய்திகள்

சுதந்திர நாட்டில் நல்ல கருத்துகளை பேச முடியவில்லை….எஸ்.ஏ. சந்திரசேகர்

சுதந்திர நாட்டில் இருக்கிறோம் ஆனால் நல்ல கருத்துகளை பேச முடியவில்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. காலை முதலே இயக்குனர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து உற்சாகமுடன் வாக்களித்து  செல்கின்றனர். வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்த நடிகர் விஜயின் தந்தையும் , இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Image result for எஸ்.ஏ. சந்திரசேகர்

அப்போது நடிகர் சூர்யா பேசிய புதிய கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கு , பதிலளித்த இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், சுதந்திர நாட்டில் இருக்கிறோம்.  ஆனால் நல்ல கருத்துகளை பேச முடியவில்லை.  இது பலருக்கும் நடக்கிறது.  தற்போது நடிகர் சூர்யாவிற்கு நடந்துள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

Categories

Tech |