நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது . மேலும் பிளஸ் டூ தேர்வு மே 3ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் அனைத்து பள்ளிகளும் பிளஸ் 2 செய்முறை தேர்வை ஏப்ரல் 16 முதல் நடத்த வேண்டுமென்று பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருக்கிறது. ஏப்ரல் முதல் 23ம் தேதிக்குள் பொது பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வை நடத்த வேண்டும். மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை பட்டியலிட்டு ஏப்ரல் 24-க்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.