ரஷ்யாவின் குழந்தையை பராமரித்து கொள்ளும் பணியை செய்து வந்த பணிப்பெண் குழந்தையின் தலையை வெட்டி ,சாலையில் எடுத்துக்கொண்டு நடந்து சென்ற சம்பவம் காண்போரை பீதியடைய செய்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு Anastasia என்ற (4 வயது )குழந்தையை பராமரித்துக் கொள்ளும் பணியை Bobokulova என்ற(43 வயது) என்ற பெண் செய்து வந்தார் .அப்போது அவர் கவனித்து கொண்டுவந்த குழந்தையின் தலையை வெட்டி கொலை செய்து அந்தக் குழந்தையின் தலையை எடுத்துக்கொண்டு சாலையில் ‘அல்லாஹு அக்பர் ‘என்று கத்தியபடி நடந்து சென்றார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இது பற்றிய தகவல்களை போலீசாருக்கு அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பெண்ணை கைது செய்ய முயற்சி செய்தபோது அவர் நான் ஒரு தீவிரவாதி என்று என்னிடம் வெடி குண்டு இருப்பதாகவும் போலீசாரை மிரட்டியுள்ளார்.
போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். Bobokulova மனநல பாதிக்கப்பட்டு இருப்பதாக நீதிமன்றம் இவரை மனநல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டது. Bobokulova தற்போது விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தனர். இதற்கு இவர் கொலை செய்யப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் எங்கள் குழந்தையை கொலை செய்தது மட்டுமல்லாமல் ,தங்கள் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அந்த பணிப்பெண் ரஷ்ய அதிபர் சிரியாவில் குண்டுவீசியதற்கு பழி வாங்குவதற்காக, இந்த சிறுமியை கொன்றதாக அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.