நாகையில் திருமணம் ஆன 1 1/2 வருடங்களில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பண்டாரவாடை பகுதியில் பக்கிரிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகவள்ளி என்ற பெண்ணுடன் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வேலைக்காரியை வைக்குமாறு மாமியார் விஜயலட்சுமியிடமும், கணவர் பக்கிரிசாமியிடமும் கனகவல்லி தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கனகவள்ளி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் கனகவள்ளி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து திட்டச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 1 1/2 வருடத்தில் கனகவள்ளி தற்கொலை செய்துகொண்டதால் உதவி கலெக்டர் மணிவேலன் மேல்விசாரணை மேற்கொண்டு வருகிறார்.