மயிலாடுதுறை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முக்கூட்டில் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. அந்த காம்ப்ளக்ஸ் கிடங்கல் பகுதியில் வசித்து வரும் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமானது. அந்த காம்ப்ளக்சில் ஆண் ஒருவர் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதாக செம்பனார் கோவில் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில் வாலிபர் பாஸ்கரிடம் வேலை பார்ப்பவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கர் மற்றும் அந்த காம்ப்ளக்ஸில் வேலை பார்ப்பவர்களிடம் வாலிபர் இறந்ததற்கான காரணம்? குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.