Categories
உலக செய்திகள்

இந்த நாட்ல இருக்காதீங்க… “சீக்கிரமா வெளிய போங்க”… பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு…!!

மியான்மரில் வசிக்கும் பிரிட்டன் மக்கள்  உடனடியாக மியான்மரை விட்டு வெளியேறவேண்டுமென்று பிரிட்டன் வெளியுறவுத்துறை எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம்  அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மரில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மியான்மர் ராணுவம் தனது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக பொதுமக்களுக்கு  எதிராக குற்றங்களை செய்யத்  துணியும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்தது. இதனால் பிரிட்டன் வெளியுறவுத்துறை மியான்மரில் வசிக்கும் பிரிட்டனை சேர்ந்த மக்களுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த  அறிக்கையில்,  ” மியான்மரில் வன்முறை நீடித்து வருவதால் அங்கு வசிக்க வேண்டிய அவசியமில்லாத பிரித்தானியர்கள் உடனடியாக மியான்மரை விட்டு வெளியேறி விடுங்கள். அங்கு அரசியல் பதற்றமும்  அமைதியின்மையும் அதிகமாகவே இருக்கின்றது. அங்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மீட்பு விமானங்கள்  இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. மியான்மரை விட்டு வெளியேற முடியாதவர்கள் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். முக்கிய தேவைகளுக்காக  மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

Categories

Tech |