குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நாகரசம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இவரின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த சுகுணா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளார்.
அதன் பின் வீட்டிற்கு வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த சுகுணாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சுகுணா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து நாகரசம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.