Categories
உலக செய்திகள்

110 பெண்கள் கொலை…. பட்டியலை வெளியிட்ட ஜெஸ் பிலிப்ஸ்…. அதிர்ச்சியடைந்த நாடாளுமன்றம்…!!

வன்முறைக்கு ஆளாகி பெண்கள் கொல்லப்படுவதை தடுக்க நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று ஜெஸ் பிலிப்ஸ் கூறியுள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்தவர் ஜெஸ் பிலிப்ஸ். இவர் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச மகளிர் விழாவில் பங்கேற்ற இவர் கடந்த ஆண்டில் மட்டும் வன்முறைக்கு ஆளாகி ஆண்களால் கொல்லப்பட்ட 110 பெண்களின் பெயர்களை வாசித்து அங்குள்ளவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது நாம் நாட்டில் எத்தனை மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்பதையும், அதேபோல் யார் யாருக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால் நம் நாட்டில் கொடூரமாக கொல்லப்படும் பெண்களை பற்றியும், அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகிறதா என்பதை பற்றியும்  நாம் எவ்வித  கவலையும் கொள்வதில்லை என்று கடுமையாக பதிவு செய்த இவர் பெண்கள் கொல்லப்படுவது எப்போதாவது நிகழும் அரிய நிகழ்வாக இல்லாமல் பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே கொல்லப்பட்ட 110 பெண்களின் பெயர்களை வாசித்த ஜெஸ் பிலிப்ஸ் கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களும்  சாரா எவரார்ட் என்ற பெயரை அடிக்கடி நினைவுபடுத்துகிறது.

இப்போது வாசிக்கப்பட்ட அந்த 110 பெண்களின் பட்டியலில் சாரா எவரார்ட் பெயர் இடம்பெறாமல் இருக்க நாம் பிரார்த்தனை செய்வோம். மேலும் இதற்குப் பிறகாவது இந்த பட்டியலில் மீண்டும் யாருடைய பெயரும் இடம் பெறாமல் உறுதிப்படுத்த ஒவ்வொரு நாளும் நாம்  இணைந்து பணியாற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |