சிவகங்கை இளையான்குடியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரச்சார வாகனம் தொடக்க விழா நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 100% வாக்களிப்பது, பொது மக்கள் வாக்களிக்கும் முறை ஆகியவை குறித்து குறும்படங்களை தாசில்தார் ஆனந்த், பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.
இந்த பிரச்சார வாகனம் இளையான்குடி பஜார் பகுதி, கண்மாய்க்கரை, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், பேருந்து நிலையம், புதூர், சாலையூர், திருவள்ளூர் சங்கையா கோவில் ஆகிய பகுதிகள் வழியாகச் செல்லும். அந்த பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமான இடத்தில் தேர்தல் குறித்து குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த தொடக்கவிழாவில் வருவாய் ஆய்வாளர் ரமேஷ், துணை தாசில்தார் முத்துவேல், திருவள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.