விருதுநகர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாத்தூர் தீப்பெட்டி தொழிலை அடிப்படையாகக் கொண்ட நகரமாகும். சாத்தூரில் விளையும் வெள்ளரிக்காயும் அங்கு தயாரிக்கப்படும் காரசேவும் அதன் ருசிக்காகவே புகழ் பெற்றவையாகும். இங்குள்ள பெருமாள் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த தொகுதியில் இரு முறை போட்டியிட்டு வென்று காமராஜர் அப்போது முதலமைச்சராக பதவியேற்றார்.
சாத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 3முறையும், சுதந்திரா மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி தலா 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும் சாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். 1991ஆம் ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவின் ராஜவர்மன் உள்ளார்.சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,51,502 ஆகும்.
சாத்தூரில் பாதாள சாக்கடை திட்டம், தொழிற்பேட்டை, பொழுதுபோக்கு பூங்காக்கள் சீரமைப்பது, கடல் தாள் பகுதிக்கு செல்லும் வழியில் நான்குவழிச்சாலை குறுக்கே மேம்பாலம் அமைப்பது போன்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. முதன்மை சாலை அகலப்படுத்தபடாதாநிலையில் குறுக்கே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கோரிக்கையும் எழுந்துள்ளது.
35 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் பேருந்து நிலையத்தில் அதிக பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். சாத்தூரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் வைப்பாற்றில் மணல் கொள்ளையை தடுக்க அதை சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
திமுக ஆட்சியில் இருந்தபோது சாத்தூரில் தொடர்பை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.அதன்பின் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 10 ஆண்டுகளில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வேலை இல்லாத இளைஞர்கள் மாநகரை நோக்கி நகரும் நிலையில் உள்ளது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் நீண்டகால எதிர்பார்ப்புகள் இனியெனும் தீராத என வரவிருக்கும் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் சட்ட தொகுதி வாசிகள்.