ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட 1 கோடியே 8 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை நகரத்தில் உள்ள ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்காக சென்ற 2 வாகனங்களை அதிகாரிகள் பிடித்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் 1 கோடியே 8 லட்சம் ரூபாயை கொண்டு சென்றது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பறக்கும் படை அதிகாரிகள் 1 கோடியே 8 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.