கனடாவிற்குள் 24 பேர் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அனுப்ப முயன்றவர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கனடாவிற்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அனுப்ப முயன்ற நபரை கண்டுபிடிப்பதற்கு போலீசார் தேடி வருகின்றனர்.மேலும் போலீஸ் அதிகாரி ஒருவர், அந்த நபர் யாழ்ப்பாணத்திலிருந்து செயல்பட்டதாக கூறி உள்ளார். மேலும் கனடாவிற்கு மக்களை அனுப்புவதற்காக அந்த நபர் 3,00,000 முதல் 5,00,000 வரை கட்டணம் வசூலித்துள்ளதாகவும் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கனடாவிற்கு செல்லும் முயற்சியில் கல்பிட்டி என்ற இடத்திற்கு லாறியில் சென்ற 24 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர் .அதில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரு பெண், 20 ஆண்கள் கைது செய்யப்பட்டவர்களில் இருந்துள்ளார்கள். மேலும் இது போன்று கனடாவுக்கு அனுப்புவதாக கூறி சட்ட விரோதமாக செயல்படும் கும்பல்களை நம்பவேண்டாம் என்று போலீசார்கள் மக்களை எச்சரிக்கை செய்துள்ளனர்