பெண்ணிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலி மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டின் பக்கத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது திடீரென அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பாரதியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது சோமசுந்தரம் அதனை தடுக்க முற்பட்டபோது, அவர்கள் அவரை கத்தியால் லேசாக வெட்டிவிட்டு அங்கிருந்து சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் குறித்து பாரதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.