மின் கம்பி உரசியதால் கரும்பு பயிர்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைபாக்கம் கிராமத்தில் கரும்புகள் பயிரிடப்பட்டிருந்தது. இந்த கரும்பு பயிரிடப்பட்ட இடத்தின் மேலே மின் கம்பிகள் தாழ்வாக இருந்துள்ளது. இதனால் ஒன்றோடொன்று மின்கம்பிகள் உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு அது வயல்களின் மீது விழுந்து தீப்பற்றியுள்ளது. இதனை யாரும் கவனிக்காத காரணத்தினால் தீ மளமளவென அருகிலிருந்த வயல்களுக்கும் பரவியுள்ளது.
இந்த தீ விபத்தில் சுமார் 8 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சுமார் பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.