மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் மனமுடைந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் சாமிதாஸ் பகுதியில் ஜான் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எழும்பூரில் இருக்கும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வனஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வனஜா கருத்து வேறுபாடு காரணமாக ஜான் கிறிஸ்டோபரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்ற ஜான் கிறிஸ்டோபர் வனஜாவை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். ஆனால் வனஜா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்து ஜான் கிறிஸ்டோபர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தலைமை செயலக காலனி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.