Categories
Uncategorized தேசிய செய்திகள்

திடீர் அறிவிப்பு! கணிதம், இயற்பியல் கட்டாயம் இல்லை – உத்தரவு நிறுத்தி வைப்பு…!!!

பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் முக்கியமானதாக கருதப்பட்டது. இந்த இரண்டு பாட  பிரிவுகளின் அடிப்படையில்தான் பொறியியல் தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதையடுத்து தற்போது கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தான் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது.

இதையடுத்து நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கணிதமும், இயற்பியலும் கட்டாயமில்லை என்று அனைத்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்தது.மேலும் வணிகவியல் மற்றும் வேளாண்மை தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது என்று அறிவிப்பு வெளியாகியது. இந்த  அறிவிப்பிற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த புதிய நடைமுறையை நிறுத்தி வைக்க அனைத்து இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |