வாக்காளர் அடையாள அட்டை என்பது 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் ஒரு அடையாள ஆகும். வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இணையதளம் வாயிலாக வழங்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கு ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இன்றும் நாளையும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நேரில் சென்று தங்களுடைய மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.