கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் மூன்றாவது தேசிய ஊரடங்கு போட இருப்பதாக இத்தாலி பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலி விமான நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி மையத்திற்கு சென்ற இத்தாலியின் புதிய பிரதமரான மரியோ டிராகி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதியதாக 1,50,000பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பாதிப்பு கடந்த வாரத்தை விட 20,000 அதிகமாக உள்ளதாகவும் கூறிய அவர் துரதிஷ்டவசமாக நாம் ஒரு புதிய மோசமான நிலையை கையாளுகிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் இத்தாலியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மூன்றாவது தேசிய ஊரடங்கு போட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கால் நம் நாட்டின் கல்வி, பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர் தற்போது இருக்கும் சூழ்நிலை எந்த காரணத்தாலும் மிக மோசமான நிலையை அடைந்துவிடக்கூடாது என்பதாலேயே இந்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி வரும் திங்கள் கிழமை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் மரியோ டிராகி தகவல் கொடுத்துள்ளார்.