Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ரோந்து பணியிலிருந்த காவலர்கள்… ஏ.டி.எம்-மில் நிரப்ப எடுத்துச் செல்லப்பட்ட பணம்… பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்போரூர் கூட்டு ரோடு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் செங்கல்பட்டில் உள்ள ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்காக ரூபாய் 1 கோடியே 8 லட்சம் பணத்தை இரண்டு வாகனங்களில் எடுத்து வந்து கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணம் இல்லாமல் பணம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தையும் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |