அரசு பள்ளியில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் சுமார் 2 மணி அளவில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது இச்சம்பவத்தன்று கோபி என்பவர் இரவு நேர காவலில் ஈடுபட்டார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் இவர் ரோந்து சென்ற போது மர்ம நபர்களால் தலைமைஆசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற கோபி பீரோவிலிருந்த ஆவணங்கள் சிதறிக் கிடப்பதை பார்த்து தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன்பின் அவர் வந்து பார்த்தபோது சிசிடிவி கேமராவும் பதிவு கருவியும் திருட்டு போனது தெரியவந்தது . இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.