மதுரை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தமிழகத்தில் 2021 கான சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதில் 100% வாக்குப்பதிவு பெறுவதற்காக அரசாங்கம் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல தேர்தல் விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களின் வருகையினால் மக்களுக்கிடையே எழும்பும் அச்சத்தினை போக்குவதற்காகவும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காகவும் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையிர் ஆங்காங்கே கொடி ஏந்தி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலிருந்து அவனியாபுரம் சந்திப்பு வரை காவல்துறையினரும் துணை ராணுவ படையினரும் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு நடத்தினர்.