லண்டனில் பல குடியிருப்புகளுக்கு சென்று பெண்களின் அறைகளை ஜன்னல் வழியாக எட்டி பார்த்த இளைஞரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி அன்று, கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னே என்ற பகுதியில் இருக்கும் எஸ்டேட் ஒன்றிற்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து அங்குள்ள குளியல் அறையின் ஜன்னலிலிருந்து அங்கிருக்கும் பெண்களை எட்டி பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தில் கதவின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் ஜன்னல் அருகே இளைஞர் நிற்கும் காட்சி பதிவாகியுள்ளது.
இதன் பிறகே காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இளைஞர் இதே போன்று பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று ஜன்னல் வழியாக பெண்களை எட்டி பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த இளைஞர் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
மேலும் அந்த இளைஞர் 18 வயதிலிருந்து 25 வயதிற்குள் இருப்பார் என்று தெரிவித்த காவல்துறையினர், இந்த இளைஞர் தொடர்பில் விவரங்கள் தெரிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.