ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான வான்பாதுகாப்பு அமைப்பின் மீது சவுதி அரேபியாவின் கூட்டு ராணுவப்படை தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
சமீப நாட்களாக ஹொடிடாஹ் நகரில் ஏமன் ராணுவத்திற்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மஃரிப் நகரில் வாழும் பொது மக்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் கோபமடைந்த சவுதி அரேபியா தலைமயிலான கூட்டு ராணுவப்படை மஃரிப் நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான வான் பாதுகாப்பு அமைப்பை தாக்கி அளித்துள்ளது.
இந்தத் தாக்குதலானது இந்த வாரத்தில் சவூதி அரேபியாவில் தாக்கி அளிக்கப்பட்ட மூன்றாவது வான் பாதுகாப்பு அமைப்பாகும். மேலும் இந்த தாக்குதலில் ஏவுகணைகள் ஏவும் கருவி, ரேடார், கிடங்கு மற்றும் கட்டுப்பாட்டு மையம் போன்றவை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
BREAKING: Saudi led-coalition destroyed a hostile Houthi air defense system in the Ma'rib front.
• Missiles launchers, radars, warehouse & command & control centre have been eliminated.
• The 3rd air defense system to be destroyed by the coalition this week. pic.twitter.com/jvhl8hzPHM
— الدفاع العربي Defense Arab (@defensearab) March 12, 2021