ஆடியோ கேசட் டேப்பை கண்டுபிடித்த பொறியாளரான லூ ஒட்டனஸ் இன்று உயிரிழந்தார்.
தற்போதைய உலகமானது நவீன கால கட்டத்திற்கு மாறியுள்ளது. இன்றைய உலகம் முழுவதும் மக்கள் அனைவரும் இன்டர்நெட் மூலமாக தங்கள் தேவைகளையும் ,தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். குறிப்பாக தற்போது அனைத்து நிகழ்ச்சிகள், படங்கள், ஆன்லைன் ஷாப்பிங், பாடல்கள் இது போன்று பல வசதிகளில் ஆன்லைன் மூலமாகவே மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர் . ஆனால் இதற்கு முன் 90களின் காலகட்டத்தில் இன்டர்நெட் வசதியை போன்றே ,அப்போது ஆடியோ கேசட் மிகப் பிரபலமாக காணப்பட்டது. அக்காலத்தில் கிராமம் முதல் நகரம் வரை எங்கு பார்த்தாலும், ஆடியோ கேசட் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
இதை டச்சு நாட்டை சேர்ந்த பொறியாளரான லூ ஒட்டனஸ் என்பவர் ஆடியோ கேசட்டை கண்டுபிடித்தார். 1960ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் தயாரிப்பு சங்கத்தில் மேம்பாட்டு துறைத் தலைவராக இருந்துள்ளார். அவர் குழுவினருடன் இணைந்து டேப் ரெக்கார்டரை வடிவமைத்தார். இதைத்தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு இவர் கண்டுபிடித்த ஆடியோ கேசட்டில் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். தற்போது 96 வயதான லூ ஒட்டனஸ்ன் தனது சொந்த ஊரான Duizel இயற்கை எய்தினார். அவரது மறைவு 90ஸ் கிட்ஸ்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.