Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

உசிலம்பட்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

உசிலம்பட்டி தொகுதி விவசாயத்தை நம்பியுள்ள தொகுதியாகும். இங்குள்ள தென் திருவண்ணாமலை எனப்படும் திடியன் கைலாசநாதர் ஆலயமும், ஆனையூர் ஐராதீஸ்வரர் மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகியவை புகழ்பெற்றவை. குற்றபரம்பரை சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு 17 பேர் பலியான பெருங்காம நல்லூர் கிராமம் இந்த தொகுதியில் உள்ளது.

அண்மைக்காலத்தில் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்கும் பண்டைய காலத் தொல்லியல் எச்சங்கள் இந்த பகுதிக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளன. உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1957 ஆம் ஆண்டு முதல் இதுவரை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 9 தேர்தல்களில் பார்வர்ட் பிளாக் கட்சி தொகுதியே கைப்பற்றியுள்ளது. அதிமுக 3முறையும், திமுக ஒரு முறையும், சுயச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ அதிமுக வை சேர்ந்த நீதிபதி.

ஆண் வாக்காளர்களை அதிகமாக கொண்ட உசிலம்பட்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,74,864 ஆகும். 58 கால்வாய் திட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் நீர் திறக்க அரசாணை வெளியிட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. பாதாளசாக்கடை திட்டம் அமைக்கப்படாததும், நீர் ஆதாரமான கண்மாய்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காததும் அதிருப்தி உள்ளது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் கல்லூரி ஆகியவை நீண்டகால கோரிக்கைகள். சேடபட்டியில் தொழிற்பேட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதும் எழில் கொஞ்சும் கணவாய்கள் பகுதியை சுற்றுலா பகுதியாக மாற்ற வேண்டும் என்பது மக்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |