Categories
உலக செய்திகள்

ஒரு ‘சான்ட்விட்ச்காக’ ஹெலிகாப்டரில்… ஹோட்டலுக்கு வந்த நபர் … ஆடிப்போன ஹோட்டல் ஊழியர் …!!!

இங்கிலாந்தில்  ஊரடங்கு நேரத்தில்  சான்ட்விட்ச் வாங்குவதற்கு ஹெலிகாப்டர் மூலம் ஹோட்டலுக்கு வந்த அவரின் வீடியோ வெளியாகி வியப்பை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து நாட்டின் கொரோனா பரவல்  தாக்கமானது இன்றளவும் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அந்நாட்டின் ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது இதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்த  நாட்டைச்சேர்ந்த பெண் சமீபத்தில்  மெக்டொனால்டு பர்கர் வாங்க சுமார் 100 கிலோமீட்டருக்கு காரை ஓட்டி சென்றுள்ளார் . இவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்த சூழலில் அதே நாட்டை சேர்ந்த ஒருவன் தனக்கு பிடித்த சான்ட்விட்சை  வாங்க ஹெலிகாப்டர் மூலம் 130 கிலோ மீட்டர் தூரம் சென்றார் . இதைக்கண்ட ஹோட்டல் ஊழியர்கள் அதை வீடியோவாக பதிவு எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளன இந்த வீடியோ லட்சக்கணக்கான மக்களை ஆச்சரியப்பட வைத்தது. அதேசமயம் இவர் மீது ஊரடங்கு விதியை மீறியதாக விசாரணை செய்யப்படும் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |