Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

கலைஞரோ..ஜெயலலிதாவோ.. முதல்வராக இருந்திருந்தால் நீட் வந்திருக்காது…. ஸ்டாலின் அசத்தல் பேச்சு..!!

ஜெயலலிதாவோ கருணாநிதியோ முதலமைச்சராக இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் வந்திருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கலைஞர் திடலில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். நிகழிச்சிக்கு பின் பொது கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,

Image result for stalin  public speech

தங்க தமிழ்ச்செல்வனை ஏற்கனவே தங்கள் பக்கம் இழுப்பதற்கு பலமுறை முயற்சி செய்தோம்,  தற்போது அவரே திமுகவை தேடி வந்து விட்டதாக குறிப்பிட்டார். தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைத்தால் இழுபறியான ஆட்சியை அமையும் ஆகையால் தேர்தலை சந்தித்து திமுக ஆட்சி கட்டாயமாக அமைக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,

Image result for stalin  public speech

கலைஞர் முதல்வராக முதல்வராக இருந்த சமயத்தில் நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழைய விடவில்லை ஏன் அம்மையார் ஜெயலலிதா கூட முதல்வராக இருக்கும் காலத்தில் நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்த அவர், என்னதான் ஜெயலலிதாவை சர்வாதிகாரி என்று திமுக விமர்சித்து இருந்தாலும், நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்காத அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர் என்பது மறுக்க முடியாத ஒன்று என தெரிவித்தார்.

Categories

Tech |