ஓசூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் ஓசூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது “அறிஞர் அண்ணா தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா? என்று கேட்டார்.
ஆனால் பல ஆண்டுகளாக அவர் பெயரைச் சொல்லி அரசியல் செய்கிற முன்னணி காட்சிகள்தான் தங்கத்தை தவிட்டுக்கு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அக்கட்சிகள் நிறைய சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். அதனால் எப்படியும் இந்த முறையும் காசு கொடுப்பார்கள். அப்படி காசு கொடுக்கும் போது நீங்கள் அவர்களிடம் ரூ. 500, ரூ. 1000 வேண்டாம் அதற்கு பதிலாக ரூ. 5000, ரூ. 10000 கொடுத்தால்தான் ஒட்டு என்று சொல்லுங்கள்” என கூறியுள்ளார்.