நத்தம் பகுதியில் தொடர் கல்குவாரி கொள்ளையில் ஈடுபட்டு வரும் லாரிகளை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மடக்கிப்பிடித்த வீடியோ வைரலாகி வருகின்றது.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும், கொள்கை பரப்பு செயலாளருமானவர் சிவசங்கரன். இவர் தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலில் நத்தம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் பல ஆண்டுகளாக சில லாரிகள் கல்குவாரி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை அரசிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்றும் இவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின் பேரில் இவர் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு நேரடியாக களத்திற்கு சென்று அங்குள்ள கல்குவாரியில் முறைகேடாக கற்களை ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் முன்னிலையில் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இச்சம்பவத்தை அவரே வீடியோவாக பதிவுசெய்து அதனை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
<iframe width=”676″ height=”380″ src=”https://www.youtube.com/embed/s_twLYgVrD8″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>