கோவிலுக்குள் தண்ணீர் குடிக்க சென்ற முஸ்லிம் சிறுவனை இந்துமத அமைப்பை சேர்ந்த நபர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
உத்திரபிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள இந்து கோவிலுக்குள் தண்ணீர் அருந்துவதற்காக அசிப் என்ற முஸ்லீம் சிறுவன் சென்றுள்ளார். இவர் கோவிலுக்குள் தண்ணீர் அருந்திவிட்டு வெளியில் வரும்பொழுது இந்துமத அமைப்பை சேர்ந்த இரண்டு நபர்கள் அச்சிறுவனை அழைத்து உன் பெயர் என்ன? என்று கேட்டுள்ளனர். அதற்கு அச்சிறுவன் அசிப் என்று கூறியுள்ளார். மேலும் உன் தந்தை பெயர் என்ன? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அச்சிறுவன் அபிப் என்று கூறியுள்ளார். அதன்பின்னர் கோவிலுக்குள் எதற்காக சென்றாய்? என்று கேட்டுள்ளனர். அதற்கு அச்சிறுவன் நான் தண்ணீர் குடிக்க சென்றேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட நபர் ஒருவர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை மற்றொரு நபர் வீடியோவாக பதிவு செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
https://twitter.com/i/status/1370483117878779907