Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

திருமங்கலம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான மாங்கல்யம் ஆண்டுதோறும் திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் இருந்து தயாரித்து  அனுப்பப்படுகிறது. எனவே திருமாங்கல்யம் என்பதை திருமங்கலம் ஆனதாக கூறப்படுகிறது. திருமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3முறை வெற்றி பெற்றுள்ளன.

பார்வர்ட் பிளாக் ஒரு முறையும், மதிமுக ஒரு முறையும் தொகுதிகளை கைப்பற்றி உள்ளனர். அதிகபட்சமாக அதிமுக 5 முறை திருமங்கலம் தொகுதியில் வெ வென்று உள்ளது.தற்போது எம்எல்ஏவாக உள்ளவர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள திருமங்கலம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,68,939.

தொகுதியில் எம்எல்ஏவாக உள்ள அமைச்சர் ஆர். வி. உதயகுமார் தொகுதிக்காக எதுவுமே செய்யவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ, தொழிற்சாலைகளை திறக்கவோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கள்ளிக்குடி பகுதியில் பேருந்துகளையும் இல்லை என்றும், தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் கிடையாது என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ரயில்வே மேம்பாலம், புதிய பேருந்து நிலையம் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது புகார்.

பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதும், விமானநிலையம் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஜெயலலிதா காலத்தில் அறிவிக்கப்பட்ட துணைக்கோள் நகரம் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்  பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை.

Categories

Tech |