Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிர படுத்தப்பட்ட வாகன சோதனை… தப்பி ஓடிய மர்ம நபர்… பறக்கும் படை பறிமுதல்..!!

பெரம்பலூரில் வாகன சோதனையின் போது 155 மதுபாட்டில்களை மொபட்டில் வந்த மர்ம நபரிடமிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்கள் அனைத்தையும் உடனடி பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளத்தில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மர்ம நபர் ஒருவர் மொபட்டில் வந்தார். அவர் மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மதுபானக் கூடத்தில் வைத்து கொண்டு வந்திருந்தார்.

அதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த மர்ம நபர் மது பாட்டில்களையும், மொபட்டையும் விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து மொபட்டையும், 155 மதுபாட்டில்களையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் பறிமுதல் செய்த மதுபாட்டில்களை ஆயத்தீர்வை மற்றும் மாவட்ட மதுவிலக்கு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |