Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி… 40 வயது மேற்பட்டோருக்கு எப்போது…? சுகாதார அமைப்பு அறிக்கை…!!!

பிரித்தானிய நாட்டில் வருகின்ற ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 40 வயது மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி முதல் கொரோனா  தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், இனி வரும் நாட்களில் தடுப்பூசி விநியோகம்  இரண்டு மடங்காக  அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் தேசிய சுகாதார சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,வரும்  வாரங்களில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு மில்லியன் டோஸ் வழங்குவதாக கூறினர். எனவே 50 வயது  மேற்பட்டோருக்கு  , அடுத்த மூன்று வாரத்திற்கு முன்பாகவே  தடுப்பூசி போடப்படும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஆனால் இந்தக் கூற்றை பிரித்தானியாவின் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மறுத்துள்ளார் .இதில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு  ’40 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்’என்று  கூறியிருப்பது தவறானது. அவர் குறிப்பிடுகையில் ‘தடுப்பூசி செலுத்துவதற்கென  கால நேரத்தை ஒதுக்கி உள்ளோம்,இதில் மாற்றம் கிடையாது’ என்று குறிப்பிட்டார். அதோடு ஏப்ரல் மாதத்தின்  இடையிலிருந்து 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |