Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தேர்தல் முடியும் வரை இப்படி தான்… ஆற்காடு பத்திரப்பதிவு அலுவலகம்… பதிவு எண்ணிக்கை குறைவு..!!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆற்காட்டில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு எண்ணிக்கை குறைந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தேர்தல் பறக்கும் படை மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரிகள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா ? என்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஆற்காட்டில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் பண பரிவர்த்தனை செய்ய முடியாத காரணத்தினாலும், சொத்துகளை வாங்குவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும் பத்திர பதிவுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பத்திர பதிவு அலுவலகமே ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Categories

Tech |