Categories
தேனி மாவட்ட செய்திகள்

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்… அதிரடி சோதனையில் அதிகாரிகள்… ஆவணமில்லாதவை பறிமுதல்..!!

தேனி அருகே வாகன சோதனையின் போது காரில் வந்த பெண்ணிடம் ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர், பறக்கும் படை அதிகாரி செல்லக்கிருஷ்ணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேகொண்டனர். அந்த சோதனையில் பூதிப்புரம் பகுதியைச் சேர்ந்த வைரமணி என்பவரது மனைவி உமாசங்கரி ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 700 பணம் காரில் எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் குறித்து தேர்தல்கள் அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |