Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 22.07.2019 ) ராசிப்பலன் …!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :

இன்று உங்களுக்கு தாராளமாக இருக்கும் பணவரவுக்கு ஏற்ப செலவு உண்டாகும். உடல்நிலையில் சிறிய பாதிப்புகள் ஏற்படும். வேளையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.  நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் தொழிலில் சிறுசிறு மாறுதல் செய்தால் நல்ல இலாபம் அடையலாம்.

ரிஷபம் :

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் உபாதைகள் நீங்கி நல்ல சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பணிபுரிபவர்கள் உடன் சாதகமாக செயல்படுவார்கள். நீங்கள் நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும்.

மிதுனம் :

இன்று உங்களின் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்க முடியும். உங்களின் பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் உங்களின் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு நல்ல லாபம் பெறுவீர்கள். நண்பர்களின் உதவிகரம் நீளும்.

கடகம் :

இன்று உங்களின் பணவரவு சுமாராக இருக்கும். உங்களின் உடல்நிலையில் சற்று சோர்வடைந்து,  சுறுசுறுப்பின்மை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் தொழில் ரீதியான பிரச்சினைகள் குறைய வாய்ப்புள்ளது. சிக்கனமாக செயல்பட்டீர்கள் என்றால் பணபற்றாக்குறை நீங்கி , உங்களின் கடன்கள் ஓரளவு குறைந்து , மனஅமைதி இருக்கும்.

சிம்மம் :

இன்று நீங்கள் சோர்வடைந்து , சுறுசுறுப்பின்மையுடன் காணப்படுவீர்கள். தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் மற்றவர்களிடம் வீண் பேச்சு உண்டாகும்.. நீங்கள் எடுக்கும் எந்த  விஷயமாக இருந்தாலும் நிதானத்துடனும் , எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.

கன்னி :

இன்று நீங்கள் எந்த காரியமாக இருந்தாலும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களின் உறவினர்களிடம்  இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் களையும். தொழிலில் எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் ஓரளவு குறையும். வேலையில் புதிய மாற்றம் உண்டாகும்.

துலாம் :

இன்று உங்களின் குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் மூலமாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும் . ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள். அலுவலகத்தில்  இருக்கும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களின் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு , சேமிப்பு உயரும்.

விருச்சிகம் :

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படும் . குடும்பத்தில் இருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கப்படலாம். நீங்கள் எதிர்பார்க்காத உதவிகள் கிடைத்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு : 

இன்று உங்களின் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் . அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உங்களின் தொழிலில் இதுவரை இருந்து வந்த தேக்க நிலை சற்று மாறும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பதால் , உங்களின் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மகரம் :

இன்று அதிகாலையிலே மகிழ்ச்சியான செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் மூலம் உங்களுக்கு அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். உங்களின் தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைத்து , உங்களின் வருமானம் பெருகும்.

கும்பம் :

இன்று உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் , அமைதியும் நிலவும். கணவன் மனைவி_க்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். நீண்ட நாளாக நீங்கள் எதிர்பார்த்த வங்கி கடன் தொழில் மூலமாக கிடைக்கும். நீங்கள் நடத்த இருக்கும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும்.  வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைத்து , வருமானம் அதிகரிக்கும்.

மீனம் :

இன்று நீங்கள் எந்த காரியத்திலும் ,  புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர் . உங்களின் குடும்பத்தில் எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகி , வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அதிகரிக்கும்.

Categories

Tech |