திமுக ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதிமுகவினரை நடுங்க வைத்துள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய டிகேஎஸ்.இளங்கோவன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, மூன்று ஆண்டுகளாக ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அவர்கள் விசாரணையே செய்யவில்லை. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எங்களுக்கு முந்தைய எடப்பாடி அரசின் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொல்கிறோம்.
முப்பது வயதுக்கு உட்பட்டு கல்வி கடன் வாங்கி , திருப்பி ஓராண்டுக்குள்ள திருப்பி செலுத்த முடியாத அவங்களுடைய கடனை , அரசு எதாவது மாணவர்களின் கல்வி கடன் எப்படி கொடுக்கிறார்கள் என்றால் படிப்பு முடித்த ஓராண்டுகள் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடு தான் கொடுக்கின்றார்கள்.
முப்பது வயது வரை அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், அந்த மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இதை செய்துள்ளோம். வேலை கிடைத்து விட்டால் அவர்களே திருப்பி செலுத்தி விடப் போகிறார். வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்ற மாணவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக 30வயதுக்குட்பட்டு, ஓர் ஆண்டுக்குள் செலுத்த முடியாத கல்விக்கடனை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளோம் என பேசினார்.