பிரித்தானிய நாட்டில் புயல் காரணமாக , கடற்கரையில் கரை ஒதுங்கிய முள்ளங்கி போன்ற நச்சுத்தன்மை கொண்ட தாவரத்தை, மக்கள் யாரும் தொட வேண்டாம், என எச்சரித்துள்ளனர்.
இங்கிலாந்தில் வடமேற்கு பகுதியிலுள்ள கடற்கரைப் பகுதியில் hemlock water dropwort roots என்ற நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட இந்த தாவரம் பார்ப்பதற்கு முள்ளங்கி போன்ற தோற்றத்தில் இருக்கும். சமீபத்தில் பிரித்தானியாவில் ஏற்பட்ட புயல் காரணமாக ,இந்த தாவரங்கள் கரையொதுங்கிய இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடலோர காவல்படையினர் ,இந்த தாவரத்தை பற்றி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வகை தாவரங்கள் நீர் நிலைகளில் அதாவது கடல், ஏரிகள் ,ஆறுகள் மற்றும் நீரோடைகள் போன்ற இடங்களில் வளரக் கூடிய ஒன்று.
இந்த தாவரத்தின் வேரானது ,ஒரு மீட்டர் உயரத்திற்கு வளரும் தன்மை கொண்டுள்ளது. இத்தாவரத்தின் ஒவ்வொரு பகுதியும் விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். எனவே கடற்கரைக்கு செல்லும் மக்கள் தங்களையும், தங்கள் செல்லப் பிராணிகளையும் அந்தத் தாவரத்தை தொடாமல் தங்களைப் பார்த்துக் கொள்ளுமாறு எச்சரித்தனர். இந்த தாவரத்தை ஏதேனும் கடற்கரையில் கண்டால் ,உடனே copelard borough சபைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மனித மற்றும் விலங்குகளுக்கு இந்த தாவரத்தினால் உடலில் பல்வேறு தீங்கினை விளைவிக்கும் என்பதால் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தினர்.