என்னால் முடிந்த அளவு சிறப்பான பங்களிப்பை நான் செய்வேன் என்று ஆப்கான் புதிய கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டி20 தொடருக்கு மட்டும் கேப்டனாக இருந்த ரசித்தான் இப்பொழுது மூன்று வகையான டி20 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி ரஷித் கான் கூறும்போது கேப்டன் பதவிக்கு என் பெயரை அறிவித்ததும் நான் வியப்படையவில்லை. ஏற்கனவே துணை கேப்டனாக இருக்கிறேன் அடுத்து கேப்டன் தானே? இந்த பதவிக்கு இப்போது நான் மனரீதியாகவும் தயாராகிவிட்டேன். நாட்டுக்காக இதுபோன்ற பதவிகள் வரும்போது எப்போதுமே தயாராக இருக்க வேண்டும். என்னால் முடிந்த அளவு சிறப்பான பங்களிப்பை நான் செய்வேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டோம். மனரீதியாக இன்னும் பலமாகவும் சிறந்த பயிற்சியுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம். எங்களிடம் திறமை இருக்கிறது. அதனை இன்னும் மேம்படுத்த வேண்டும். தேசிய அணிக்கு விளையாடும் போது வீரர்கள் பிட்னஸ் விசயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். அணியில் இருக்கும் இளம் வீரர்கள் முதல் தங்கள் மீது அதிகளவு நம்பிக்கை வைக்க வேண்டும். அதோடு கடுமையான பயிற்சி மேற்கொண்டால் எதையுமே நாம் எளிதாக சாதிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.