Categories
தேசிய செய்திகள்

பகீர் செய்தி… கொரோனா தடுப்பூசியால் பெரும் அச்சம்… உச்சகட்ட பரபரப்பு…!!!

அஸ்ட்ரஜெனகா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் ஒருவர் ரத்தம் உறைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.

இந்நிலையில் அஸ்ட்ரஜெனகா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் ஒருவர் ரத்தம் உறைந்த நிலையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் கோவிஷில்டு தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்தது. இந்தியாவில் கோவிஷில்டு பக்க விளைவு குறித்து தீவிரமாக கண்காணிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 2.8கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் நிலவி வருகிறது.

Categories

Tech |