மதுரை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மர்ம நபர்கள் கல் வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் போட்டியாளர்கள் அனைவரும் ஆங்காங்கே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இதனால் பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் வகையில் துணை ராணுவத்தினரும் காவல்துறையினரும் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தும்கூட சில மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றனர் . இத்தாக்குதலில் கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியுள்ளது . இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி முத்து மொழி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.