தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் இரண்டு மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தஞ்சை அம்மாபேட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில் 20 மாணவிகளுக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், மேலும் 36 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட மொத்த பாதிப்பு 57 ஆக அதிகரித்துள்ளது. மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோணா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவியுள்ளதா என கண்காணிக்க தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.