Categories
சினிமா மாநில செய்திகள்

மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்தவர் சூர்யா…. ரஜினிகாந்த் ஆதரவு

மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்தவர் சூர்யா என்று சூர்யாவின் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் அகோரம் அறக்கட்டளை மூலமாக ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகின்றார்.அகரம் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய சூர்யா புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இதற்க்கு ஆளும் அதிமுக , பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.ஆனால் நடிகர் சூர்யா வின் கருத்துக்கு பல்வேறு மக்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

Image result for நடிகர் சூர்யா

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக ரஜினிகாந் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். மாணவர்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகளை சூர்யா செய்து வருகிறார்.எனவே மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. எனவே அவர் பேசும் கருத்துகள் வரவேற்கத்தகுந்தவை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |