Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா அமையல…. விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

திருமணமாகாமல் இருந்ததாலும், அரசு வேலை கிடைக்காததாலும் விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெஞ்ஞானபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சுரேஷ் வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு அரசு வேலை கிடைக்காத விரக்தியிலும், திருமணம் ஆகாத ஏக்கத்திலும் இருந்த சுரேஷ் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மயங்கிய நிலையில் இருந்த சுரேசை மீட்டு உடங்குடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷிற்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |