மதுரை மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக மணல் அள்ளிய மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
தமிழகத்தில் பல பகுதிகளில் சில நபர்களால் மணல் கொள்ளை இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது. இதனால் காவல்துறையினர் மணல் கொள்ளையை தடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் ஆலம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் அனுமதியின்றி மூன்று நபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனை அறிந்த மதுரை மாவட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர் . மேலும் மணல் கொள்ளைக்காக பயன்படுத்திய இரண்டு லாரிகள் மற்றும் மணல் அள்ளும் இயந்திரத்திணையும் பறிமுதல் செய்துள்ளார்கள். இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.