மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இளைஞர் அரசியல் கட்சி தலைவர் முனிஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல நாட்களாக தமிழகத்தில் கனவு கண்ட இளைஞர்களுக்காக தமிழக இளைஞர் அரசியல் கட்சி இயக்கத்தை ஆரம்பித்தோம்.2020தில் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 2021 தமிழக சட்டமன்ற தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள இருக்கிறோம்.
234 தொகுதியிலும் இளைஞர்களை மையப்படுத்தி, தனித்து போட்டியிடுவதற்காக தமிழக இளைஞர் அரசியல் கட்சி தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் மொத்தம் 38மாவட்டங்கள் உள்ளது. 38 மாவட்டத்திலும் 234 தொகுதி பொறுப்பாளர்களும் உள்ளனர். பகுதி கழக நிர்வாகிகள் வரை தமிழக இளைஞர் அரசியல் கட்சி முழுக்க உங்களுக்கு இளைஞர்களையும், சிறிதளவு பெரியவர்களையும் வச்சு இந்த இயக்கத்தை ஆரம்பிச்சி இருக்கோம். மாவட்ட பொறுப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் பெரியவங்களாவும்,
தொகுதி பொறுப்பில் இருப்பவர்கள் இளைஞர்களாகவும் வச்சு நாங்க செயல்பட்டுக்கொண்டு வருகின்றோம். கிளை கழகம் வரை இல்லை என்றாலும், பகுதி கழகம் வரை தமிழக இளைஞர் அரசியல் கட்சி இருக்கின்றது.நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை முன் நிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்வோம். அனைத்து அரசியல் கட்சியும் சாதிக்கும், மதத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு கொடுப்பதில்லை. அதன் காரணமாகவே நாங்கள் தனித்து போட்டியிடுகின்றோம் என தெரிவித்தார்.