Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் அழைப்பிதழ் வழங்கி… யூத் ரெட் கிராஸ் … வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!

சிவகங்கை காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கல்லூரியில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி யூத் ரெட் கிராஸ் சார்பில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. காரைக்குடி அருகே அழகப்பா அரசு கலைக் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு தேர்தல் அழைப்பிதழ்களை கல்லூரி முதல்வர் துரை வழங்கினார்.

அவர் முதன்முறையாக வாக்களிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவ-மாணவிகள் கல்லூரி நுழைவு வாயிலில் வரிசையாக நின்று பதாகைகளை ஏந்தியிருந்தனர். இந்த நிகழ்ச்சி 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்றது. யூத் ரெட் கிராஸ் அலுவலர் பேராசிரியர் வேலாயுத ராஜா இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Categories

Tech |