மாயமான இளம்பெண்ணிற்கு அவர் கடைசியாக இருந்த இடத்தில் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்த மக்கள் முடிவு செய்ததற்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்தவர் சாரா எவரார்ட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி உள்ளார். இந்நிலையில் இவர் கடைசியாக காணப்பட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இக்கூட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் பொதுமக்கள் சிலர் சமூக இடைவெளியை பின்பற்றி கிலாபாம் பகுதியில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் இந்த அஞ்சலி கூட்டத்தில் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து பிரிட்டனில் 37 பகுதிகளில் மாலை 6 மணிக்கு அஞ்சலி கூட்டம் நடத்த இருப்பதாக நாடு முழுவதும் மக்கள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் தங்கள் அனுமதி இல்லாமல் அஞ்சலி கூட்டம் நடைபெற்றால் கொரோனா விதிகளின்படி ரூ. 10,11,834 தொகை அபராதம் விதிப்பதாக எச்சரித்துள்ளனர். இதனால் மாலை 6 மணிக்கு நடைபெறவிருந்த அஞ்சலி கூட்டத்தை ரத்து செய்த அவர்கள் இரவு 9 மணிக்கு ஒவ்வொரு குடியிருப்புகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.