கடன் தொல்லை அதிகரித்த காரணத்தால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் முதாசீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது குடும்பத்தை நடத்துவதற்காக சபனா போதிய வருமானம் இல்லாத காரணத்தால் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சபனா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.